உணவில் சேர்க்கப்படும் ஏலக்காய் வாசனையை மட்டும் தருவதில்லை. அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது.
தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் நடக்கும் ஆச்சரியங்கள்
தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நல்ல பசி எடுக்கும். பசி ஏற்படாது சாப்பிட பிடிக்காது என கூறுபவர்கள் இதை செய்யலாம்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட அவஸ்தைப்படுபவர்களும் சளியால் இருமல் வந்து தொடர்ந்து இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.
கண் பார்வை அதிகரிக்கும்

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.
இயற்கையாகவே ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி ஏலக்காய் புற்று நோய் வராமல் தடுக்கவும், தள்ளிப் போடவும், புற்று நோய் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது.