குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை..

0
268

டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் ஆபத்தான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள்

குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | Babies Dengue Fever Doctors Advice

குழந்தைகளை குறைந்த பட்சம் மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்காவது அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பது சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.