பில் கேட்ஸ்சுடன் இணைந்து செயற்திட்டம்; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0
349

உலக பிரசித்தி பெற்ற வர்த்தகரான பில் கேட்ஸ் உட்பட பல உலக வர்த்தகர்கள் கலந்துக்கொள்ளும் சர்வதேச புத்தாக்க மின்சக்தி மாநாடு ஒன்றை அடுத்த ஆண்டு நடுபகுதியில் இலங்கையில் நடத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தி வருகிறார்.

ஆலோசகர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த ஜனாதிபதி 

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி, தனது காலநிலை மாற்றங்கள் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுடன் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எரிக்சொல்ஹெய்ம் மற்றும் ருவான் விஜேவர்தன இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Ranil Wickremesinghe-ரணில் விக்ரமசிங்க

பில் கேட்ஸ்சுடன் இணைந்து காலநிலை மாற்றங்கள்  தொடர்பாக முகாமைத்துவ செயற்திட்டம்

பில் கேட்ஸ்-Bill Gates

உலகில் புத்தாக்க மின்சக்தி துறையில் ஈடுபடும் பல பிரதானிகளை நாட்டுக்கு அழைக்குமாறு அறிவித்துள்ளார்.

அந்த மாநாட்டுக்கு வரும் பிரதான நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கையில் புத்தாக்க மின்சகதியை துறையை முன்னேற்றவும் பில்கேட்ஸூடன் இணைந்து காலநிலை மாற்றங்களை முகாமைத்துவம் செய்யும் செயற்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனிடையே காலநிலை மாற்றம் தொடர்பான சட்டமூலம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.