உடலில் ரத்த உற்பத்தி அதிகமாக அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
பீட்ரூட் சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்
பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.
நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாகும்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி

கொய்யாப்பழத்தில் புரதம், கொழுப்பு மற்றும் மாவுச் சத்துகள் சிறிதளவே இருந்தாலும், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. 100 கிராம் கொய்யாவில் 210 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது.
இரும்புச்சத்தை கிரகிக்க வைட்டமின் சி மிகவும் அவசியம். இதன் கலோரி அளவு 51. நார்ச்சத்து 5.2% இருக்கிறது. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சிறிதளவு இருக்கிறது. 100 கிராம் கொய்யாவில் 0.27 மில்லி கிராம் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் வலிமை பெறும்.

ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை – தினமும் 4 எடுத்துக் கொள்ளவும், பீர்க்கங்காய் – வாரம் இரண்டு முறை, நெல்லிக்காய் – தினமும் ஒன்று எடுத்துக் கொள்ளவும்.