ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு இனி பரீட்சைகள் இல்லை!

0
381

ஆரம்பப் பிரிவு வகுப்புக்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தவணைப் பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்படுகின்ற புள்ளிகளை, வருட இறுதியில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுடன் இணைத்து, அதனை இரண்டாக பிரித்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு பாடசாலை மிகவும் விருப்பமான இடமாக மாற்றும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்; இனி பரீட்சைகள் இல்லை! | Good News For Students No More Exams
மாணவர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்; இனி பரீட்சைகள் இல்லை! | Good News For Students No More Exams

மேலும் எதிர்வரும் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும், சகல பாடத்திட்டங்களையும் முழுமைப்படுத்தி, கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.