விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா; ஆலோசனை நடத்தவுள்ள இந்திய பிரதமர்..

0
355

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அவசர ஆலேசானை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா

சீனா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா பவலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து நேற்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா கொரோனா தொற்று குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அதிகாரிகள், தொற்று நோய் வல்லுநர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா; இந்தியாவில் லாக்டவுனா? பிரதமர் மோடி அவசர ஆலோசனை! | Corona Threatens Again Lockdown In India

அதன் பின்னர் பேசிய நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் பால் அனைவரும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா; இந்தியாவில் லாக்டவுனா? பிரதமர் மோடி அவசர ஆலோசனை! | Corona Threatens Again Lockdown In India

கூட்டத்தில் வெளிநாடுகளில்  இருந்து இந்தியா வரும் பயணிகளை விமான நிலையங்களில் சோதனை நடத்த வேண்டுமா என்பது தொடர்பில் அதிகாரிகளுடன் இந்திய பிரதமர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.