இந்தியாவில் 4 கால்களுடன் பிறந்த குழந்தை!

0
314

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் சிக்கந்தர் கம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர்.

4 கால்களுடன் பிறந்த குழந்தை ; உறவினர்கள் அதிர்ச்சி! | A Girl Child Born With 4 Legs

அங்கு, கடந்த புதன்கிழமை ஆர்த்திக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு நான்கு கால்கள் இருந்ததால் ஆர்த்தியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவர் வெளியிட்ட தகவல்

இதுகுறித்து மருத்துவர் தாகத் கூறுகையில்,

“கருமுட்டை பிரிதலின் போது ஏற்பட்ட குறைபாட்டால் குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளது. இது அரிதான நிகழ்வு இருப்பினும், குழந்தை 2.3 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.

4 கால்களுடன் பிறந்த குழந்தை ; உறவினர்கள் அதிர்ச்சி! | A Girl Child Born With 4 Legs

அதேவேளை, கூடுதலாக உள்ள 2 கால்கள் செயலிழந்த நிலையில் உள்ளன. இதனால் வேறு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

வேறு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அறுவை சிகிச்சை மூலம் கூடுதலாக உள்ள 2 கால்கள் அகற்றப்படும் என கூறினார். மேலும் அதன் பிறகே குழந்தை இயல்பு வாழ்க்கை வாழ முடியும். குழந்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.