சமபோஷ விற்பனைக்கு தடை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
225

சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொரவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு இதில் அஃப்லாடாக்சின் என்ற இரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதன்படி மொறவ பிரதேசத்திற்குட்பட்ட இப்பொருளின் விற்பனையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யுமாறும், தற்போது சந்தையில் உள்ள பொருட்களின் இருப்புக்களை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இந்தப் பொருட்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் அவற்றில் அஃப்லாடாக்சின் என்ற இரசாயனத்தின் அளவு அதிகமாக இருந்ததாக நீதிமன்றத்தில் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.