15 வயது சிறுமியை 11 தடவைகள் துஷ்பிரயோகம் செய்த இளைஞன்!

0
182

மொறவக்க பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அப் பெண்ணின் காணொளி காட்சிகளை பாதிக்கப்பட்ட பெண்ணின் பாடசாலை அதிபர் உட்பட பலருக்கு வாட்ஸ்ஸப்பில் பகிரப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயது பெண்ணை 11 தடவைகள் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் | Young Man Who Molested A 15 Year Old Girl 11 Times

சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது இல்லத்தில் வைத்து 11 தடவைகள் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற பின்னர் சந்தேக நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான அந்தரங்க விடயங்களை அந் நபரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த காணொளி காட்சிகளை அவர் தனது நண்பர்கள் உட்பட பலருடன் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சந்தேக நபர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.