இலங்கைக்கு படையெடுத்து வரும் இந்தியர்கள்; காரணம் தெரியுமா?

0
113

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிடுவதற்காக அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அந்தவகையில் , இன்று காலை மட்டும் 78 இந்திய பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, வேறு இந்து மதத் தலங்களுக்கும் இந்த பயணிகள் செல்ல விரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மேலும் 800 இந்திய சுற்றுலாப் பயணிகள் அடுத்த ஆறு மாதங்களில் குழுக்களாக நாட்டிற்கு வருகைத்தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு படையெடுக்கும் இந்தியர்கள்; காரணம் என்ன தெரியுமா? | More Indians Came To The Country

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.