லண்டனில் இந்து கோவிலை நடத்தும் முஸ்லீம் நபர்; ஏனென்று தெரியுமா!

0
145

லண்டனில் உள்ள பிரபலமான இந்து கோயில் ஒன்றை முஸ்லிம் நபர் ஒருவர் நடத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் சுவாமி ஐயப்பா மையம் என்ற பெயரில் இந்த கோவில் இயங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 453 High St North Manor park லண்டன் E12 6TJ என்ற விலாசத்தில் இந்த கோவில் இயங்கி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கோயிலை நடத்தும் முஸ்லிம் நபரின் இயற்பெயர் ஷம்சுதீன் அப்துல் ஜலீல் டிஎஸ் மூர்த்தி பின் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹாக்னி என்ற பகுதியில் லண்டன் ஷீரடி சாய் பாபா கோயில் லிமிடெட் என்ற பெயரில் மற்றுமொறு கோயிலை நடத்தி வருகின்றார்.

குறித்த நபர் மோசடியான முறையில் நடத்தி வரும் கோயில்களின் பதிவுகளில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கமைய, அவர் ஒரு மலேசிய நாட்டவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில்கள் தொடர்பில் பொலிஸ் உள்ளிட்ட பல தரப்பினரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு குற்ற செயல்களில் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைக்கும் வரையில் விசாரணைகள் நடத்தப்படாதென அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இந்து கோயில் நடத்தும் முஸ்லிம் நபர்; என்ன காரணம் தெரியுமா! | A Muslim Man Runs A Hindu Temple In London

இந்நிலையில் லண்டனில் வாழும் தமிழர்கள் சிலர், கோயில் தலைவர்கள், உள்ளூர் கவுன்சில் தலைவர் மற்றும் பிரித்தானியாவில் உள்ள இந்து கோயின்ல்கள் கவுன்சில் ஆகியோருக்கு இந்த தகவலை அனுப்ப முயற்சித்து வருகின்றனர்.

இந்த கோயிலை நடத்துவதனால் பாரிய அளவில் பணப்புழக்கம் உள்ளதெனவும் இங்கு பணம் கோடி கோடியாக கொட்டுவதாகவும் தமிழர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.