இணையத்தில் புயலை கிளப்பும் கத்தார் இளைஞர் கானிம் அல் முஃப்தா!

0
542

20 வயதுடைய இளைஞரான யூடியூபர் கானிம் அல் முஃப்தா என்பவர் பிறப்பிலேயே குறைபாட்டுடன் பிறந்தவர்.

பாதி உடலுடன் பிறந்த இவர் மத்திய கிழக்கின் மிகவும் நம்பிக்கையான மனிதர்களில் ஒருவர் என்று சர்வதேச அளவில் பிரபலமானவர்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று அனைவரின் மனதையும் கவர்ந்து வைரலாகிறது. இந்த இளைஞர் லாஃப்பரோவில் அரசியல் படிக்க வேண்டும். பாராலிம்பியனாக வேண்டும் என்று கனவு காண்கிறார். காணும் கனவை நனவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் கானிம் அல் முஃப்தா.

யூடியூப் பிரபலமான கானிம் அல் முஃப்தா, பிறக்கும்போதே உடலின் கீழ் பாதி இல்லாமல் பிறந்தார். கத்தார் உலகக் கோப்பை போட்டிகளின் தொடக்க விழாவில் மோர்கன் ஃப்ரீமேனுடன் மேடைக்கு வந்தார்.

கால்கள் இல்லாவிட்டாலும், தன்னம்பிக்கை மற்றும் முயற்சியால் இந்த கத்தார் இளைஞர் மலை ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது இவரின் நம்பிக்கையின் உச்சத்திற்கு ஒரு சிறிய உதாரணம்.

இவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள உடற்பயிற்சி காணொளி நெட்டிசன்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வைரலாகிறது. @g_almuftah என்ற தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் காணொளி வெளியிட்டுள்ளார்.

East Meet West என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் வெளிநாட்டு மாற்றுத் திறனாளியுடன் அவர் இணைந்து உடற்பயிற்சி செய்யும் காணொளி வெளியாகி பார்பவர்களைக் கொள்ளை கொண்டுள்ளது.