இடிந்து விழுந்த பெரிய மசூதி; பரபரப்பு காணொளி!

0
527

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள இஸ்லாமிய மைய மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தால், மசூதி தரைமட்டமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், தீயில் எரிந்துகொண்டிருந்த மசூதியின் கோபுரம் சரிந்துவிழும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மேலும், இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,

தீ எவ்வாறு பற்றியது தொடர்பான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. இந்த விபத்தில் யாரும் உயிர் இழக்கவில்லை.

பாதுகாப்பு பணியாளர்கள் கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றவும். அப்பகுதியின் அருகே குடியிருப்பு வாசிகள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி கொள்ளவும்.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்தும் வரை அந்த பகுதிக்கு, பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.