பணம் செலுத்தாவிடில் தடுப்புக்காவல்; முன்னாள் அமைச்சர் மீது நீதிமன்ற உத்தரவு!

0
517

மட்டக்களப்பில் உள்ள தனியார் சர்வதேச பாடசாலை ஒன்றில் கடமையாற்றிவரும் 46 ஆரியர்களுக்கு உரிய ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு செலுத்தவேண்டிய 66 இலட்சம் ரூபாவை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடசாலையின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா உட்பட பாடசாலையின் நிர்வாகத்தைச் சேர்ந்த நால்வருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பணம் செலுத்தாவிடில் விளக்கமறியல்

உரிய நிதியங்களுக்கான நிதியை இன்று வியாழக்கிழமை (20) செலுத்துமாறும் இல்லாவிடில் 6 மாதத்துக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் அன்னவர் சதாத் உத்தரவிட்டார்.

பணம் செலுத்தாவிடில் விளக்கமறியல் ;முன்னாள் அமைச்சரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | If Payment Is Not Made The Court Orders Ex Mp

சர்வதேச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 வரையில் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 66 இலட்சத்து 54 ஆயிரத்து 779 ரூபாய் 40 சதம் செலுத்தவேண்டும்.

இந்நிலையில் பாடசாலையின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா மற்றும் பாடசாலை நிர்வாகத்தைச் சேர்ந்த அவரது மனைவி மற்றும் உறவினர் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு தொழில் திணைக்களம் , மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.