கோட்டாவின் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக விகாரை நிர்மாணித்து வழிபாடு; கூலித் தொழிலாளி! (Photos)

0
424

அலஹெர – மினிபுரகம கிராமத்தில் வசிக்கும் ஒருவர் பத்து இலட்சம் ரூபா செலவில் விகாரை ஒன்றை நிர்மாணித்து வழிபாடு செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக அவர் இந்த விகாரையை கட்டியதாக கூறப்படுகின்றது.

அலஹெர – மினாபுர கிராமத்தைச் சேர்ந்த W.G.சந்திர சேன பண்டா (45) முன்பள்ளி ஒன்றிற்கு அருகாமையில் இந்த விகாரையை நிர்மாணித்து அங்குள்ள சிறுவர்களுக்கு வழங்கியுள்ளார்.

கூலி வேலை செய்து சம்பாதித்த பணம்

கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் இந்த விகாரையை அவர் கட்டியுள்ளார். இதற்கு மேலதிகமாக, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தனவின் நினைவாக பிரசங்க பீடம் மற்றும் மேசை ஒன்றும் இவ் விகாரைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோட்டாவின் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் கூலித் தொழிலாளி!(Photos) | Mercenary Thanks To Gota S Ancestors

அதேவேளை குறித்த பிரதேசத்தில் பல பொது இடங்களில் ஐந்து விகாரைகளை நிர்மாணித்துள்ள இவர், முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கோட்டாவின் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் கூலித் தொழிலாளி!(Photos) | Mercenary Thanks To Gota S Ancestors