மூன்று வருடங்களாக காணாமல் போன பூனை அதன் உரிமையாளருடன் மீண்டும் இணைந்தது

0
424

கனடாவின் சஸ்கடூன் பகுதியில் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான பூனையை 3 ஆண்டுகள் பிரிந்து இருந்ததாகவும், அண்மையில் அந்த பூனை மீண்டும் கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வோல்டர் வைற் என்ற பூனையே இவ்வாறு 3 ஆண்டுகளின் பின்னர் குறித்த பெண்ணின் கரங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீடு மாறிய போது இந்த பூனை காணாமல் போயிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

எஜமானரை இழந்து நிர்க்கதியான பூனையை மிருக நல பராமரிப்பு தொண்டு நிறுவனம் ஒன்று பராமரித்து வந்துள்ளது.

தனது செல்லப்பிராணியான பூனையை காணவில்லை என குறித்த பெண் நீண்ட நாட்களாக தேடி வந்துள்ளார்.

முகநூல் ஊடாகவும் ஏனைய சமூக ஊடகங்களின் வாயிலாகவும் குறித்த பின் இந்த பூனையை தேடி வந்துள்ளார்.

எனினும் நீண்ட இடைவெளியின் பின்னர் குறித்த பூனை அந்தப் பெண்ணை வந்தடைந்துள்ளது.

மூன்று ஆண்டுகள் காணாமல் போயிருந்த பூனை மீண்டும் எஜமானருடன் இணைவு | Missing Cat Reunion 3 Years

தொண்டு நிறுவனம், விளம்பரங்களின் மூலம் குறித்த பூனையின் படத்தை அடையாளம் கண்டு உரிமையாளரிடம் சேர்த்துள்ளது காணாமல் போன பூனையை கண்ட பெண் கண்ணீர் மல்க பூனையை கட்டித் தழுவியமை நெகிழ்ச்சி மிக்க தருணமாக  அமைந்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் கதாபாத்திரத்தின் பெயரே இந்த பூனைக்கு சூட்டப்பட்டிருந்தது என பூனையின் உரிமையாளரான நிக்கி பார்க்ஸ் தெரிவித்துள்ளார்.