பொது இடத்தில் சில்மிஷம்; கன்னத்தை பொங்க வைத்த நடிகை…!

0
104

பொது இடத்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த நபரை பளாரென அறைந்த நடிகையின் காட்சி வைரலாகி வருகின்றது.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இவர் நடிப்பில் தற்போது சாட்டர்டே நைட் என்கிற மலையாள படம் உருவாகி உள்ளது.

இப்படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளதால் படத்தின் ப்ரொமோஷன் வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இப்படத்தில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாட்டர்டே நைட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கோழிக்கோடில் உள்ள பிரபல மால் ஒன்றில் நடைபெற்ற நிலையில் இதில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி கலந்து கொண்டனர்.

ஏராளமாக குவிந்த ரசிகர்கள் மத்தியில் நடிகை சானியா ஐயப்பன் மாட்டிக் கொண்ட நிலையில் நபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கடுப்பான நடிகை சானியா ஐயப்பன் அந்த நபரை கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டுள்ளார். அவர் அறைந்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ள நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.