பேருந்தில் எம்ஜிஆர் பாடல்; தன்னை மறந்து ஆடிய பாட்டி

0
94

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த தருணத்தில் அங்கு போடப்பட்ட எம்ஜிஆர் பாடலுக்கு தன்னை மறந்து ஆடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக பேருந்தில் பயணம் செய்யும் போது பாடல் போடுவதை டிரைவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதுவும் கிராமப்பறங்களுக்கு செல்லும் மினிபஸ்களில் பழைய காலத்து பாடல்கள் தான் பெரும்பாலும் ஒலிக்கும்.

இங்கும் பேருந்து ஒன்றில் எம்ஜிஆர் பாடல் ஒலிக்க பயணிகளும் கேட்டுக்கொண்டே பயணித்து செல்கின்றனர். இதில் பாட்டி ஒருவர் அங்கு ஒலித்த எம்ஜிஆர் பாடலான மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்ற பாடலுக்கு அழகாக நடனம் ஆடியுள்ளார்.

இதனை அவதானித்த சக பயணி ஒருவர் காணொளியாக எடுத்து முகநூலில் வெளியிடவே இன்று பாட்டியின் காணொளி ஆக்கிரமித்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

குறித்த பாட்டியின் நகைச்சுவை கலந்து நடன காட்சி இதோ…