ரணில் விக்கிரமசிங்க (Ranil Wikcremesinghe) ஜனாதிபதியானாலும் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. அமைச்சுக்களில் ராஜபக்சக்களின் ஆவி இன்னும் செயற்பட்டு வருகின்றது.
அத்துடன் கால்பந்தாட்ட வருடாந்த சம்மேளனம் பிற்போடப்பட்டு விடுக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பில் அமைச்சரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளபோதும் அது தொடர்பில் அமைச்சருக்கு தெரியாமால் இருக்கி்ன்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (22-09-2022) இடம்பெற்ற நாடாளுமன்ற நிலையியற் கட்டளை திருத்தம் தொடர்பான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
விளையாட்டு அமைச்சில் இருக்கும் கால்பந்து சம்மேளம் அதன் வருடாந்த சம்மேளத்தை பல வருடங்களாக நடத்தியில்லை. அவர்கள் இந்த வருடாந்த சம்மேளத்தை மே மாதம் நடத்தி இருக்கவேண்டும்.
ஆனால் அதனை நடத்தாமல் அப்போது இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் அந்த திகதியை ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை நீடித்திருந்தார்.
இருப்பினும், அதனை நடத்தாமல் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் செப்டம்பர் 15ஆம் திகதிவரை நீடித்திருக்கின்றார்.

இதேவேளை, 15ஆம் திகதி கால்பந்தாட்ட சம்மேளனம் இடம்பெறவி்ல்லை. இதுதொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கின்றது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தாமனி அறிவிப்பில் கால்பந்தாட்ட வருடாந்த சம்மேளனத்தை ஒக்டோபர் 30ஆம் திகதிவரை நீத்திருக்கின்றது.
ஆனால் இங்குள்ள விசேட அம்சம்தான் இந்த வர்த்தமானி அறிவிப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கைத்திடவில்லை.
இருப்பினும் அமைச்சருக்கு தெரியாமல் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அமைச்சரின் ஸ்கேன் கையொப்பத்தை பயன்படுத்தி கால்பந்தாட்ட வருடாந்த சம்மேளத்தை ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு நீடித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பிசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். விசாரணை அல்ல. சரியாக இருந்தால் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தை பணி நீக்கம் செய்யவேண்டும்.
அமைச்சருக்கு தெரியாமல் பணிப்பாளர் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தால் அமைச்சர் ஒரு பொம்மையாக இருக்க வேண்டும்.
அமைச்சருக்கு தெரியாமல் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பணிப்பாளருக்கு ஆலாேசனை தெரிவித்த, வர்தத்தமானி அறிவிப்பு வெளியிடுவதாக இருந்தால், தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆவி இந்த அமைச்சில் தொடர்ந்து செயற்படுகின்றது.
இதுதொடர்பில் வெட்கப்படுகின்றோம். அதேபோன்று கால்பந்தாட்ட சம்மேளனத்தில் கோடிக்கணக்கில் நிதி இருக்கின்றது.

இந்த கோடிக்கணக்கான நிதி செலவிடப்படும் வேலைத்திட்டங்களை எந்தவித கேள்விக்கோரவையும் மேற்கொள்ளால் எல்.எஸ்.ஆர் என்ற நிறுவனத்துக்கே வழங்கப்படுகின்றது.
இந்த நிறுவனம் இந்த நாடாளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர் ஒருவரின் மாமாவின் நிறுவனம் என்றே நினைக்கின்றேன்.
எனவே புதிய அரசாங்கம் என்றும் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டாலும் எந்த மாற்றமும் இடம்பெற்றதில்லை.
அமைச்சுக்களில் ராஜபக்சக்களின் ஆவிகளுன் செயற்பாடுகள் இன்னும் இடம்பெற்று வருகின்றன. அதனால் அரசாங்கத்தின் இந்த பயணம் நாட்டை மேலும் அழிவுக்கே கொண்டு செல்லும் என்றார்.