பௌத்தமயமாக்கலுக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

0
333

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதி கோரியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

வீதியை முடக்கி போராட்டம்

இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் , அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி ஊடாக பரமேஸ்வராச் சந்தியை அடைந்து , அங்கிருந்து சிறிது நேரம் வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் பேரணியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தனர்.

பௌத்த மயமாக்கலை கண்டித்து  யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்! (Photos) | Jaffna University Students Protest

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும் நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து நேற்று (21) குருந்தூர் மலையில் அப்பகுதி மக்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில்சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த மயமாக்கலை கண்டித்து  யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்! (Photos) | Jaffna University Students Protest

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் இ.மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பௌத்த மயமாக்கலை கண்டித்து  யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்! (Photos) | Jaffna University Students Protest

 ரவிகரன் – மயூரன் பிணையில் விடுதலை

அதேவேளை கைது செய்யப்பட்ட வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், இரத்தினராசா மயூரன் ஆகியோர் பிணையில் விடுதலை சற்றமுன் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

பௌத்த மயமாக்கலை கண்டித்து  யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்! (Photos) | Jaffna University Students Protest