யாழில் வெளிநாட்டு பெண்ணை தகாத முறையில் துன்புறுத்திய 10 பேருக்கு நேர்ந்த கதி!

0
33

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில், ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை தகாத முறையான துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்படும் போது சந்தேகநபர்கள் அனைவரும் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார்.

யாழில் வெளிநாட்டு பெண்ணை சுற்றிவளைத்த 10 பேருக்கு நேர்ந்த கதி! | The Fate Of10 People Foreign Woman In Yali

அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை தகாத முறை ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

மேலும் இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.