இருளில் மூழ்க போகும் விகாரைகள்; அரசாங்கத்தின் சூழ்ச்சியா!

0
450

மத வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மத்திய மாகாண மகா சங்க சபையில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏனைய உப துறை சபைகளை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் நடைபெற்ற மத்திய மாகாண சபைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதுடன், வணக்கத்துக்குரிய கலஹா சிறிசாந்த தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், விகாரைகளின் மின் கட்டணம் ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

இருளில் மூழ்க போகும் விகாரை;  அரசாங்கத்தின் சூழ்ச்சியா! | Viharai To Sink In The Dark

கட்டணம்

எனது விகாரையின் மின் கட்டணம் இதுவரை 60,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. வெசாக், பொஸோன் போன்ற காலங்களில் ஆலயங்களை இருளில் மூழ்கடிக்கும் சதியா இது என்ற பலமான சந்தேகம் எமக்கு உள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையால் இனி வரும் காலங்களில் விகாரைகளில் ஒரு லைட்டை கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .

வரவிருக்கும் “போயா “ தின நாளில் அனைத்து விகாரைகளினதும் மின்சாரத்தை துண்டித்து, விகாரைகளை இருளில் மூழ்கடித்து எதிர்ப்பு தெரிவிக்கும் யோசனையை இன்று நாம் முன்வைக்கிறோம்.

எதிர்காலத்தில், நாடு முழுவதிலும் எமது தலையீட்டின் ஊடாக மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக செயற்பட போவதாக அறிவித்துள்ளார்.