மொட்டு கட்சியின் விசுவாசிகள் குறித்து அதிரடி உத்தரவு!

0
409

மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த (Sanath Nishantha) மற்றும் மிலான் ஜயதிலக்க மற்றும் கட்சியின் விசுவாசியான டான் பிரியசாத் ஆகியோரின் பயன்படுத்திய தொலைபேசிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மொட்டு கட்சியின் விசுவாசிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு! | Slpp Party Loyalists Order Hand Over Phones To Cit

இந்த உத்தரவு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் பதிவான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொட்டு கட்சியின் விசுவாசிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு! | Slpp Party Loyalists Order Hand Over Phones To Cit

சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோர் கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலின் போது கவனிக்கப்பட்ட முக்கிய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.