கோட்டாபயவின் கெட்ட நேரம்; பதவியிழந்தார் தாய்லாந்து பிரதமர்!

0
412

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ சாவை (Prayut Chan-o-cha) அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியிலிருந்து இடை நிறுத்தியுள்ளது.

பதவிக்கால வரம்பின் சட்டப்பூர்வ மறு ஆய்வு முடிவு வரை அவரை உத்தியோகபூர்வ பணியிலிருந்து நீதிமன்றத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபயவின் கெட்டநேரம்; பதவியிழந்தார் தாய்லாந்து பிரதமர்! | Bad Time Of Gotabaya Pm Of Thailand Resigned

கடந்த 2014 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்த்து பிரயுத் (Prayut Chan-o-cha) ஆட்சியைப் பிடித்தார். அவர் தனது பதவிக்கால வரம்பை மீறியதாக தாக்கல் செய்யப்படடுள்ள மனுவை பரிசீலிக்க காரணம் இருப்பதாக நீதிமன்றம் ஏகமனதாக ஒப்புக்கொண்டது.

அதற்கமைய, நீதிபதிகள் குழாமினர் தமது குழாமின் பெரும்பான்மை (4/5) தீர்மானத்துக்கமைய இன்று முதல் பிரயுத்தை (Prayut Chan-o-cha) அவரது பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

கோட்டாபயவின் கெட்டநேரம்; பதவியிழந்தார் தாய்லாந்து பிரதமர்! | Bad Time Of Gotabaya Pm Of Thailand Resigned

பிரதமர் பிரயுத் (Prayut Chan-o-cha)அரசியலமைப்பில் உள்ள எட்டு ஆண்டு பதவி வரம்பு விதியை மீறியுள்ளாரா என்பது குறித்த முடிவு எப்போது வெளியிடப்படும் என்று நீதிமன்றம் அறிவிக்கவில்லை.

அவருக்கு எதிராக முடிவுகள் வெளியானால், அவர் உடனடியாக தனது பதவியை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு சட்டத்துக்கமைய முன்னாள் இராணுவத் தளபதியும் நீண்டகால அரசியல் தலைவருமான துணைப் பிரதமர் பிரவித் வோங்சுவான் (77) இடைக்கால பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டாபயவின் கெட்டநேரம்; பதவியிழந்தார் தாய்லாந்து பிரதமர்! | Bad Time Of Gotabaya Pm Of Thailand Resigned

இதேவேளை மக்கள் போராட்டத்தார் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார். இந்த நிலையில், அவரது கெட்ட நேரம்தான் தாய்லாந்து பிரதமரின் பதவியையும் பறித்து விட்டதா என எண்ணத் தோன்றுகின்றது.