நெருக்கமான தனது புகைப்படத்தை பதிவிட்டு, அமீர் உடனான தனது காதலை உறுதி செய்த பாவனி ரெட்டி!

0
234

பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி ரெட்டி. அவர் விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார்.

அது ஷோ பார்ப்பவர்கள் எல்லோரையுமே கலக்கமடைய வைத்தது. அதற்கு பிறகு அதே ஷோவில் வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவர் பாவனியிடம் தனது காதலை சொன்னார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடி வருகின்றனர். அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டார்களா என்கிற கேள்வியை தான் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பாவனி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து அவருடனான நெருக்கமான எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அமீர் குறித்து பதிவிட்டது மட்டுமின்றி அவரை love you da எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பாவனி ஒரு வழியாக தனது காதலை ஒப்புக்கொண்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.