வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் ரொஜஸ் நிறுவனம்

0
338

கனடாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரொஜஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அண்மையில் ரொஜஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை, பல்வேறு சந்தர்ப்பங்களில் சேவை இடைநிறுத்த பட்டிருந்தது அல்லது செயலிழந்து இருந்தது.

இந்த நிலைமையினால் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்தனர்.

குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொடுக்கல் வாங்கல் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர்.

தொலைதொடர்பு நிறுவனத்தின் சேவை முடக்கமானது பெரும் அசவுகரியங்களை ஏற்படுத்தி இருந்தது இதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமது வாடிக்கையாளர்களுக்கு உரிய நட்டையிட்டு தொகையை வழங்குவதற்கு ரொஸஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

தொலைதொடர்பு சேவை ஸ்தம்பித்தமை காரணமாக ஏற்பட்ட பாதிப்பை புரிந்து கொண்டுள்ளதாகவும் அதற்கான நட்டஈட்டை வழங்க தயாரெனவும் நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே வென்றெடுக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் கடந்த ஐந்து நாட்களாக சேவை முடக்கப்பட்டிருந்த காரணத்தினால் வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கிய சிரமங்களுக்கு நட்ஈடு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் ரொஜஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டோனி ஸ்டஃபரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் ரொஜஸ் தொடர்பு நிறுவனத்தின் சேவைகள் தொடர்ந்தும் சீரான முறையில் கிடைக்கப்பெறவில்லை என வாடிக்கையாளர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது