இராணுவ அதிகாரியின் காணொளியை வெளியிட்டவருக்கு கொலை மிரட்டல்!

0
606

குருநாகல் யக்கஹபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞரை உதைக்கும் காட்சியை பதிவு செய்த இளைஞருக்கு இராணுவ அதிகாரியால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் அந்த  இளைஞர் கூறியுள்ளதாவது,

நான்கு நாட்களுக்கு மேலாக எரிபொருள் வரிசையில் தாம் உட்பட பலர் நின்றதாகவும் இதன் போது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த எரிபொருளை பொலிஸாருக்கு வழங்கினர்.

இதன்போது தான் தாக்குதலுக்குள்ளான இளைஞர் நான்கு நாட்களாக நாம் வரிசையில் நிற்கிறோம் எமக்கு 1500 ரூபாவுக்கு பெற்றோல் வழங்கிவிட்டு பொலிஸாருக்கு வழங்குங்கள் என கூறினார்.

பொலிஸார் அமைதியாக நின்றுக்கொண்டிருந்த நிலையில் இராணுவ அதிகாரி இளைஞரை தாக்கிய நிலையில் அதனை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் எனக்கும் நேற்று மாலை மரண அச்சுறுத்தல் விடுத்தார்.

குறித்த இராணுவ அதிகாரி என்னை அச்சுறுத்தினார் என்பதற்கு ஆதாரம் என்னிடம் இருக்கிறது என தெரிவித்த அந்த இளைஞர் அச்சத்தால் இன்று என் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி சகோதரர் ஒருவரின் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

இது தொடர்பில் சட்ட ஆலோசனைகளுடன் பொலிஸில் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறினார். இதேநேரம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை இராணுவம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.