மன்னார் மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம்!

0
112

மன்னார் மீனவர்களிடம் பெரும் தொகை மீன்கள் அகப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90க்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளில் 1000க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று, இன்று அதிகாலை கரை திரும்பியுள்ளனர்.

மன்னார் மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம்!

இவ்வாறு கரை திரும்பிய மீனவர்களுக்கு, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களின் வரத்தும் எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளது.    

மன்னார் மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம்!

நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு  இவ்வாறு பெரும் தொகை மீன்கள் கிடைத்துள்ளமை  வர்களிடத்தில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.