பசிலின் இரகசிய விளையாட்டு ஆரம்பம்

0
675

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இன்னும் கட்டுப்படுத்தி வருவது பசில் ராஜபக்ச என்பது நிரூபணமாகியுள்ளதாக எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இதனை கூறியுள்ளதுடன் இதன் காரணமாக தம்மால் அரசாங்கத்தில் இணைய முடியாது எனவும் அறிவித்துள்ளனர்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தனர்.

எனினும் நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் போது எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினரை அந்த பதவிக்கு தெரிவு செய்ய இணக்கம் வெளியிடப்பட்டிருந்தது.

இறுதியில் பசில் ராஜபக்ச தலையிட்டு பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர்.c

இந்த நிலையில், இன்று முற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ள எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்படியான நிலைமையில் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளனர்.