இலங்கையில் தங்க விலையில் மாற்றம்!

0
336

இலங்கையில் தங்க விலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக துறைசார் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நாட்டில் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே வேளை கடந்த சில வாரங்களாக தங்கம் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது தங்க விலை சரிவில் காணப்படுவதாகவும் துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இவை தங்கம் வாங்க காத்திருப்போருக்கு சரியான வாய்ப்பாக அமையலாம் எனவும் அவர்கள் கணித்துள்ளனர்.

இதேவேளை, குறுகிய காலத்தில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1780 டொலராகவும், மெக்ஸ் தங்கத்தின் விலை 10 கிராம் அளவுகளுக்கு 48,800 ரூபாவாகவும் சரிவடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகவும் துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளனர்.