எரிபொருள் பற்றாக்குறை சில தினங்களில் முடிவுக்கு வரும்!

0
219

நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை சில தினங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படுமென தாம் நம்புவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது கருத்துரைக்கையிலே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொலன்னாவ மற்றும் முத்துரஜவெல ஆகிய பகுதிகளில் இருந்து எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் இன்று முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கையினை துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.