நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நீடிக்கவுள்ள ஊரடங்கு!

0
759

கொழும்பில் இன்று வன்முறை வெடித்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீடு உள்ளிட்ட  அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. 

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டி 11ம் திகதி வரையில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி கொழும்பில் தற்போது பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அலரி மாளிகை பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், மற்றும் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அலரி மாளிகை பகுதியில் சேதப்படுத்தப்பட்ட பொருட்கள் அப்புறப்படுத்தப்படுகின்றது. மேலும், மாலைப் பொழுதில் பேருந்துகளுக்கு வைக்கப்பட்ட தீ தற்போது வரையிலும் இலேசாக எரிந்துகொண்டிருப்பதையும் காணமுடிகின்றது.