காரை தனியாக காரை செலுத்திச் சென்ற 4 வயது சிறுவன்!

0
65

நெதர்லாந்தின் உட்ரெட்ச் (Utrecht) நகரில் 4 வயது சிறுவன் தனது தாயாரின் கார் ஒன்றை தனியாக வீதியில் செலுத்திச் சென்ற சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவன் காரை செலுத்திச் சென்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்களுடன் மோதியபின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

பிஜாமா அணிந்திருந்த சிறுவன் வெறுங்காலுடன் காரிலிருந்து ஓடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும் குளிரான வேளையில், சிறுவன் வீதியில் தனியாக நடந்து செல்வதைக் கண்டவர்கள் அது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் புதிய மெக்ஸ் வெர்ஸ்டாப்பன் (நெதர்லாந்தைச் சேர்ந்த போர்மியூலா வன் காரோட்ட வீரர்) ஒருவரை தாம் கண்டுபிடித்துள்ளதாக நெதர்லாந்து பொலிஸார் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் தந்தை வேலைக்குச் சென்றிருந்த நிலையில், தனது தாயின் கார் திறப்பை எடுத்த இச்சிறுவன், காரை செலுத்திச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் தனியாக நடந்து சென்ற சிறுவன் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், கைவிடப்பட்ட நிலையில் உள்ள கார் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் ஓட்டிச்சென்ற கார அவரது தாயாரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து தாய்க்கு பொலிஸார் தொலைபேசி அழைப்பு எடுத்து, சிறுவனை உரையாட வைத்துள்ளனர்.

இதன்போது சிறுவன், கார் இயங்குவதைப் போன்று வாயால் ஒலி எழுப்பியதுடன், சுக்கானை திருப்புவதைப் போன்றும் செய்துகாட்டியதன் மூலம், சிறுவனே காரின் சாரதி என தாம் உணர்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Gallery