அவசரமாக சொத்துக்களை விற்கும் சவுதி அரச குடும்பம்!

0
35

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு பயந்து, அரச குடும்பத்து உறுப்பினர்கள் பலர் தங்களின் சொத்துக்களை அவசர அவசரமாக விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக சல்மான் முடி சூடிய பின்னர், நாட்டில் மட்டுமல்ல சொந்த குடும்பத்திலும் அதிரடி காட்டி வருகிறார். சவுதி அரேபியாவில் இதுவரை அமுலில் இல்லாத பல முக்கிய நகர்வுகளையும் அவர் முன்னெடுத்துள்ளார்.

மேலும், நிதி முறைகேடு, ஊழலில் ஈடுபட்டு வந்த சொந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலரை வீட்டுக் காவலில் வைத்து கடுமையாக விசாரித்துள்ளதுடன், அவர்களின் சொத்துக்களையும் முடக்கினார். அந்த வகையில் தற்போது தமது குடும்ப உறுப்பினர்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அரச குடும்பத்து உறுப்பினர்கள் பலர் செய்வதறியாது தங்கள் சொகுசு படகுகள், குடியிருப்புகள் என விற்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி இளவரசி ஒருவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தமது குடியிருப்புகள், படகுகள் உட்பட 600 மில்லியன் டொலர் பெருமதியான சொத்துக்களை அவசர அவசரமாக விற்பனை செய்துள்ளார்.

அரச குடும்பத்தில் இருந்து செலவுக்கான தொகை பெருமளவு குறைக்கப்பட்ட நிலையிலேயே, அரச குடும்பத்து உறுப்பினர்கள் தற்போது தங்கள் சொத்துக்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்து உறுப்பினர்கள் சிலர் தங்கள் குடும்பம், உதவியாளர்கள், சொகுசு வாழ்க்கை என மாதம் 30 மில்லியன் டொலர்கள் வரையில் செலவிடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே பட்டத்து இளவரசர் சல்மான், கடும் நடவடிக்கை முன்னெடுத்ததாக தெரிய வந்துள்ளது.

அன்றாட தேவைகள், பராமரிப்பு செலவுகள், வரி, ஊழியர்களுக்கான ஊதியம், தனிப்பட்ட விமானங்கள் மற்றும் படகுகளை நிறுத்தி வைப்பதற்கான கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு பெருந்தொகை செலவாகும் என்றே கூறப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களாலையே, குறித்த இளவரசி தமது சொத்துக்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.