ரஷ்யாவில் மழலையர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 2 குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!

0
34

ரஷ்யாவில் மழலையர் பள்ளியில் புகுந்த ஒருவன் 2 குழந்தைகள் உட்பட 3 பேரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்.

வெஷ்கைமா நகரில் செயல்பட்டு வரும் சிறுவர்களுக்கான பள்ளியில் திடீரென புகுந்த ஒருவன் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 2 குழந்தைகள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர்.

மற்றொரு ஆசிரியர் காயமடைந்த நிலையில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதேவேளை துப்பாக்கியால் சுட்ட மர்மநபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான்.

இந்த சம்பவம் பற்றியும், சுட்ட நபர் குறித்தும் பொலீசார் விசாரித்து வருகின்றனர்.