பிரான்ஸில் பொலீசார் மீது வெடிபொருட்களை வீசிய மக்கள்!

0
44

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் இம்மானுவேல் மேக்ரான்(Emmanuel Macron) வெற்றி பெற்றதற்கு சில பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் இம்மானுவேல் மேக்ரான்(Emmanuel Macron) வெற்றி பெற்றுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட பிரான்ஸ் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான்(Emmanuel Macron) 58.8 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென்(Marine Le Pen) 42 சதவீதம் வாக்குகள் பெற்றார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள மேக்ரானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பிரான்ஸ் அதிபராக மீண்டும் இம்மானுவேல் மேக்ரான்(Emmanuel Macron) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரான்சில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.

பாரீஸ் மற்றும் லியோன் பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தை பொலீசார் கட்டுப்படுத்த முயன்றனர்.

அப்போது, பொலீசார் மீது மக்கள் வெடிபொருட்களை வீசியதால், இரு தரப்பினருக்கும் இடையே போராட்டம் வெடித்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.