இலங்கைப் பெண் உட்பட 10 பேரை வேன் ஏற்றிக்கொன்ற கனேடியர்

0
549

நான்கு ஆண்டுகளுக்கு முன் கனடாவின் ரொரன்றோவில் நடைபாதையில் நடந்துகொண்டிருந்த மக்கள் மீது வேன் ஒன்றைக்கொண்டு வேண்டுமென்றே மோதினார் ஒரு கனேடியர்.

அன்று பரிதாபமாக பலியான அப்பாவிகளில் ஒருவரான இலங்கையரான ரேணுகா அமரசிங்கா என்ற தனது தோழியை கண்ணீருடன் நினைவுகூருகிறார் ரங்கிகா கருணதிலகே.

ரேணுகா எனக்கு சொந்த சகோதரியைப் போன்றவர் என்று கூறும் ரங்கிகா, அவரை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன், அவர் இறக்கவேண்டியவர் அல்ல என கண்ணீர் மல்கக் கூறுகிறார்.

2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்ற Alek Minassian (28) என்ற அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அந்த கோர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, Minassian மீது 10 கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் 16 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி Minassianக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த Minassian, Incel என்ற ஒன்லைன் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், காதலிக்கவும், பாலுறவு கொள்ளவும் பெண் கிடைக்காததால், பெண்கள் மீதும், பாலுறவு கொள்பவர்கள் மீதும் வெறுப்புற்று, அவர்களை கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.