எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்!

0
37

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென இலங்கை பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையம் மீண்டும் தெரிவித்துள்ளது.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக முனையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக 575 பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையம் மேலும் தெரிவித்துள்ளது.