மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருக்கும் காவல் துறையினர்

0
34

றம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், கேகாலை மற்றும் றம்புக்கனை காவல்நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு விசாரணையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.