ஈஸ்டர் தாக்குதலுக்காக நாடாளுமன்றில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி!

0
422

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்றில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இவ்வாறு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டிலுள்ள 3 தேவாலயங்கள் உள்ளிட்ட கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் அடங்களாக 07 இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த மிலேச்சத்தனமாக தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 269 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் அங்கவீனமடைய நேரிட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(21) பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 196 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.