ரஷ்யாவின் சக்திவாய்ந்த டாங்கிகளை உக்ரைனால் எப்படி அழிக்க முடிந்தது?

0
519

ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையால் தங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆயுதம் சாத்தான்-2 (சர்மாட்) என்று அழைக்கப்படுகிறது. ரஷ்யாவின் அடுத்த தலைமுறை ஏவுகணைகளில் ஒன்றாக உள்ளது.

அதிபர் புடினின் வார்த்தைகளின்படி, இது “வெல்லமுடியாத ஆயுதம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏவுகணை(ஆயுதம்), அணுசக்தி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஒரு குறுகிய ஆரம்ப ஊக்க சக்தியுடன் செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிர் ஏவுகணை தாக்குதலை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 200 தொன் எடை கொண்டது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “சர்மாட் என்பது உலகின் மிக நீண்ட தூர இலக்குகளை அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையாகும். வடக்கு ரஷ்யாவில் உள்ள ப்லெசெட்ஸ்க் காஸ்மோட்ரோமில் சோதனை “வெற்றிகரமாக” நடந்தது. இந்த ஏவுகணை நமது நாட்டின் அணுசக்தி படைகளின் போர் ஆற்றலை கணிசமாக அதிகரிக்கும்” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ரஷ்யாவின் புதிய அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, “ரஷ்யாவின் இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வழக்கமானது தான், அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இந்தச் சோதனையை அமெரிக்காவுக்கும் அல்லது அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகக் கருதவில்லை.

நிச்சயமாக, ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் தூண்டப்படாத ஆக்கிரமிப்பு உக்ரைனைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.