20 நாட்களுக்குள் இரண்டு முறை வந்த கொரோனா!

0
258

ஸ்பெயினில் 31 வயதான பெண்ணொருவருக்கு 20 நாட்களுக்குள் இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நபருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரை அறியப்பட்ட குறைந்தபட்ச கால இடைவெளி இதுவே என ஸ்பெயினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுகாதார பணியாளரான அப் பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா திரிபாலும், ஜனவரியில் ஒமிக்ரான் திரிபாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டபோது எவ்வித அறிகுறியும் தென்படவில்லை எனவும் எனினும் , சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு அவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே அவர் வெவ்வேறுபட்ட கொரோனா திரிபால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டமை தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.