ஐஸ்கிரீம்களில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துகள்கள்: கனடா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
260

கனடாவில் பல பிராண்ட் ஐஸ்கிரீம்களைத் திரும்ப பெற கனேடிய சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

பல பிராண்ட் ஐஸ்கிரீம்களில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தின் பேரில், அவற்றைத் திரும்பப் பெறுவதற்கு கனேடிய சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

Agropur Cooperative என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, Baskin and Robins, Best Buy, President’s Choice மற்றும் Scotsburn Joins Farmers ஆகிய பெயர்களில் விநியோகிக்கப்படும் ஐஸ்கிரீம்களில் பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது.

கனடா முழுவதும் இந்த ஐஸ்கிரீம்கள் விநியோகிக்கப்படும் நிலையில், அவற்றில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை உண்ணக்கூடாது என கனேடிய உணவு ஆய்வு ஏஜன்சி தெரிவித்துள்ளது.