கூட்டத்தில் இருந்து வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை பதிவுசெய்த கனேடிய அமைச்சர்

0
520

அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்தில் இருந்து கனடாவின் துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கூட்டத்தில் ரஷ்ய நிதியமைச்சர் காணொளி வாயிலாக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கனடா நிதியமைச்சர் உட்பட்ட குழு கூட்டத்தில் இருந்து சிலர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து தமது சமூக ஊடக பக்கத்தில், வாஷிங்டனில் இந்த வார கூட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை ஆதரிப்பது பற்றியது. ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பு என்பது உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இதனால், தொடர்புடைய கூட்டங்களில் ரஷ்யா பங்கேற்கவோ அல்லது சேர்க்கவோ கூடாது என Chrystia Freeland குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் , தொடரும் ரஷ்ய படையெடுப்பு மற்றும் போர்க்குற்றங்களுக்கு முன்னால் உலக ஜனநாயக நாடுகள் வேடிக்கை பார்க்காது எனவும் கனடா நிதியமைச்சர் Chrystia Freeland குறிப்பிட்டுள்ளார்.

 அதேவேளை ஜி20 கூட்டத்தில் இருந்து கனடா நிதியமைச்சருடன் மத்திய வங்கி ஆளுநர், அமெரிக்க அதிகாரி ஒருவர், உக்ரைன் நிதியமைச்சர் மற்றும் ஐரோப்பிய அதிகாரி ஒருவர் ஆகியோரே இவ்வாறு வெளியேறியதாக கூறப்படுகின்றது.