13 ஆவது நாளாக தொடர்கிறது காலி முகத்திடலில் மக்களின் எழுச்சி!

0
382

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் 13 ஆவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு “கோட்டாகோகம” என பெயர்சூட்டி இன்றுடன் 13 ஆவது நாளாக போராடி வருகின்றனர்.

ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்தும் காலி முகத்திடலில் கோஷம் எழுப்பப்பட்டது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறு கோரி இலங்கை மத்திய வங்கி தொழிற்சங்க ஒன்றியமானது காலிமுகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.

மேலும் மக்களின் எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்தியில் ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பௌத்ததேரர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெற்று வருவதோடு போராட்டக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.