பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; வீடொன்றில் சடலங்கள் மீட்பு

0
495

பிரான்ஸில் வீடொன்றில் இருந்து குழந்தை ஒன்று மற்றும் இரு இளம் பெண்கள் உட்பட மூவரது சடலங்கள் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சடலங்கள் ஸொம் (Somme) மாவட்டத்திற்குட்பட்ட அமியா பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்ப்பட்டுள்ளன. பெண்களில் ஒருவர் குறித்த குழந்தையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வன்முறை சம்பவத்தினால் அவர்கள் சில நாட்கள் முன்பு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடல்கள் சிதைவடைந்து, துர்நாற்றம் வீசிய நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் உயிரிழந்த இரண்டு இளம் பெண்களும் 23 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அமியாவிலுள்ள நிறுவனத்தின் முகாமையாளர் தனது ஊழியர்களில் ஒருவரை காணவில்லை எனவும் கடந்த புதன்கிழமை முதல் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை எனவும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அப் பெண்ணுக்கு அழைப்பேற்படுத்தினாலும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை எனவும் இதற்கு முன்னர் அவர் அவ்வாறு செய்ததில்லை எனவும் நிறுவன முகாமையாளர் கூறியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற போது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

சமையலறையில் ஒரு பெண்ணின் சடலமும், படுக்கையறை கட்டிலில் ஒரு பெண்ணின் சடமும் காணப்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்த பெண்களில் ஒருவரின் மகன் என சந்தேகிக்கப்படும் குழந்தையின் சடலம் மற்றொரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரத்த கரையுடன் கூடிய கத்தி ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ள நிலையில் விசாரணைகள இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை உயிரிழந்த பெண்களின் ஒருவரது முன்னாள் கணவர் இந்த சம்பவத்துடன் தொடர்புப்ட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ள நிலையில் ஐஇசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; வீடொன்றில் இருந்து பெண்கள் மற்றும்  குழந்தையின் சடலங்கள் மீட்பு - கனடாமிரர்