அமெரிக்காவில் மற்றுமொரு முக்கிய பதவியில் இந்திய வம்சாவளி பெண்!

0
500

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் (Kamala Harris) பாதுகாப்புத் துறை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தி சேத்தி (Shanti Sethi) நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியான சாந்தி சேத்தி (Shanti Sethi) , 2010 முதல் 2012 வரை அமெரிக்க போர் கப்பல் ஒன்றின் கமான்டராக பணியாற்றியவர்.

அத்துடன் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் சாந்தி சேத்தி (Shanti Sethi) முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.