ஜுலியன் அசாஞ்சே தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
33
ஜுலியன் அசாஞ்சே தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விக்கி லீக்ஸ் ஸ்தாபகர் ஜுலியன் அசாஞ்சேவை (Julian Assange) அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜுலியன் அசாஞ்சே (Julian Assange) அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அந்நாட்டு அரசின் இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டங்களின் கீழ் அசாஞ்சேவுக்கு எதிராக வழக்குக்கு தொடுக்கப்படும்.

இதில் அவர் குற்றவாளியாக காணப்பட்டால் 175 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை ஜுலியன் அசாஞ்சேவை (Julian Assange) அமெரிக்காவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இது குறித்து பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், அசாஞ்சேவின் (Julian Assange) சட்டத்தரணிகள், மேற்படி தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.