ரம்புக்கனை சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்

0
54

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ரம்புக்கனை பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடாத்துவது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளது.

கடுமையான அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான எவ்வித அவசியமும் இருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.