புடின் கேட்ட கேள்வியால் மாயமான பாதுகாப்புத்துறை அமைச்சர்!

0
41

ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான செர்ஜெய் ஷிகோவிடம் ( Defence Minister Sergei Sheiko ) உக்ரைன் நாட்டின் முக்கிய நபர்களை ஏன் ஆக்கிரமிக்க முடியவில்லை? என ரஷ்ய அதிபர் புடின் (Putin) கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

Defence Minister Sergei Sheiko

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்து அந்நாட்டின் பல முக்கிய நகர்களில் தாக்குதல் மேற்கொண்டு நிலைகுலையச் செய்திருக்கிறது. எனினும், உக்ரைன் வீரர்களும் கடும் எதிர் தாக்குதலை நடத்தியதால் உக்ரைனின் பெரிய நகர்களை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை.

இந்நிலையில் , இந்தப் போரில் ரஷ்யா ஏறக்குறைய முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று உலக நாடுகள் கூறியுள்ளன. ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் செர்ஜெய் ஷிகோ ( Defence Minister Sergei Sheiko), கடந்த ஒரு மாதமாக பொது இடங்களில் தலைகாட்டாமல் இருக்கிறார்.

அதற்கு முன்பாக அதிபர் புடின் (Putin) இவர் மீது கடும் கோபமடைந்ததாகவும் போரில் பின்னடைவை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அவர் தலைமறைவானதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் பாதுகாப்பு துறை அமைச்சரான செர்ஜெய் ஷிகோவுக்கு ( Defence Minister Sergei Sheiko)  சமீபத்தில் கடும் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், புதினை சந்தித்த பின்னரே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

மேலும் உகரைன் போருக்காக ஒதுக்கப்பட்ட நிதி, ஜெனரல்கள் பலரால் திருடப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் அவர்கள் மீது அதிபர் புடின் கோபத்தில் இருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.